'ஹாலிவுட்ல நடிச்சா பெரிய ஆளா? மாஸ் கிளாஸ்'ன்னு நம்ம சொல்லிக்க கூடாது..' தனுஷை தாக்கி பேசினாரா சிம்பு? கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள்

simbu speaks about dhanush fans memes getting viral on social media

டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

simbu speaks about dhanush fans memes getting viral on social media

சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.

simbu speaks about dhanush fans memes getting viral on social media

இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . தற்போது, இவர் நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

simbu speaks about dhanush fans memes getting viral on social media

ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்காக நடிகர் சிம்பு 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து வித்தியாசமான கெட் அப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

simbu speaks about dhanush fans memes getting viral on social media

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு நடித்து வந்தார். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்த சிம்பு, பத்து தல படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க மீண்டும் ரிஸ்க் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.

simbu speaks about dhanush fans memes getting viral on social media

வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாஸ் கிளாஸ் என்றெல்லாம் நம்மை நாமே கூறிக்கொள்ள கூடாது. அதை மக்கள் தான் கூற வேண்டும் என்று சிம்பு பேசியிருந்தார். இதை திருச்சிற்றம்பலம் பட விழாவில் தனுஷ் பேசியதை தான் இவர் இவ்வாறு பேசுகிறார், தனுஷ் மீது இவர் வன்மத்தை கக்குகிறார் என்றெல்லாம் ட்விட்டரில் கடுமையாக மோதி கொண்டிருந்தனர்.

simbu speaks about dhanush fans memes getting viral on social media

தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் சிம்பு தனுசை தாக்கும் விதமாக பேசியதாக ட்விட்டர்வாசிகள் புது புயலை கிளப்பி இருக்கிறார்கள். அதில் பேசும் சிம்பு தான் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து விட்டால் ஒரு ஹாலிவுட் நடிகராக மாறிவிடுவேன். பிறகு அடுத்து என்ன நடக்கும் என்று கேட்கிறார். பெரிய ஆள் ஆக வேண்டும் என்று பலர் பேசுகிறார்கள்.

simbu speaks about dhanush fans memes getting viral on social media

பெரிய ஆள் என்றால் என்ன என்று எனக்கு தெரியவில்லை நம் வேலையை நாம் ஒழுங்காக செய்தால் பெரிய ஆள் ஆகிவிடலாம் அதுவே நம்மை உயர்த்தும் என்றெல்லாம் பேசினார். சிம்புவின் இந்த பேச்சு தனுஷை தான் தாக்கி இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கிளப்பி விட்டுள்ளனர். தனுஷ் சமீபத்தில் தி கிரேம் ஏன் ஹாலிவுட் படத்தில் நடித்த முடித்து இருந்தால் அதை மேற்கோள் காட்டி தான் சிம்பு இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்று ரசிகர்கள் மீம்ஸ்களை போடத் தொடங்கி விட்டனர்.

simbu speaks about dhanush fans memes getting viral on social media

இதனால் மீண்டும் சிம்பு தனுஷ் ரசிகர்கள் மோதிக் கொண்டிருக்கின்றனர். சிம்பு குறித்து தனுசு ரசிகர்கள் மீம்ஸ் போட தொடங்கி இருக்கின்றனர். மேலும் சிம்பு வன்மத்தை கக்குகிறார் என்றும் பேச தொடங்கி இருக்கின்றனர்.

Share this post