Viral Video : 'அப்போ இருட்டு அறைல நீங்க அப்டி பண்ணினதே இல்லயா?' நிரூபரை கேள்வியால் ஷாக் செய்த சிம்பு !

டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . தற்போது, இவர் நடித்து வந்த வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்காக நடிகர் சிம்பு 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து வித்தியாசமான கெட் அப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தற்போது, தனது தந்தை உடல்நிலை, சிகிச்சை மீது கவனம் செலுத்தி வரும் சிம்பு, தந்தையின் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இவரது பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, சிம்பு பேட்டி, மேடை பேச்சு என எதுவென்றாலும் அது சர்ச்சையாகவோ, சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாகவோ மாறுவது வழக்கம். அந்த வகையில், முந்தைய ஒரு பேட்டியில், நிரூபர் ஒருவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறகு அவருடைய ஸ்டைலை உங்களிடம் காணமுடிகிறது. ரஜினிக்கு குவியும் குடும்ப ரசிகர்கள் உங்கள் படத்திற்கு வருவது மிக குறைவு. இதை எப்படி உணர்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த சிம்பு, குடும்பபாங்கான படமும் வேண்டும். அதை தாண்டி நடுத்தர வயதை உடையவர்கள் தான் அதிக சினிமாவை பார்க்க வருகிறார்கள்.
அவர்களுக்காக எப்படி எடுக்க வேண்டுமோ அப்படி படத்தில் நடிக்க வேண்டியதுதான் என்று கூற குறுக்கீட்டு பேசிய நிரூபர் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மாதிரி கதை வந்தால் நடிப்பீர்களா என கேட்க அதையும் மீறி உள்ள அடல்டான கதைகளை எடுத்து அந்த மாதிரி படம் நான் பண்ணுவேன் என கூறி, ஏன் நீங்கள் எல்லாம் இருட்டு அறையில் முரட்டு குத்து பண்ண மாட்டீங்களா? என நிரூபரை பதிலுக்கு கேட்டார்.
இதை கேட்ட நிரூபர் இதை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் எப்படி இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்? என ஆச்சரியத்தில் கேட்டார். அப்படியும் இருக்கனும் இப்படியும் இருக்கனும் என பேசி சமாளித்தார் சிம்பு.