தந்தைக்கு நெஞ்சு வலி.. வயிற்றில் ரத்த கசிவு.. உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லும் சிம்பு ! அதிர்ச்சியளிக்கும் அறிக்கை

Simbu releases press release on t rajendar health issue getting viral

நடிகர், இயக்குனர், பாடகர், டிஸ்ட்ரிபியூட்டர் என பல அவதாரங்களுடன் தமிழ் திரையுலகில் வலம் வருபவர் டி.ஆர். ராஜேந்தர்.

இவரை டி.ஆர். என ரசிகர்களும், திரையுலகினரும் செல்லமாக அழைப்பர். ஒரு தலை ராகம் படத்தின் மூலம் இயக்குனர், நடிகர், பாடகர் என அறிமுகமாகி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர்.

Simbu releases press release on t rajendar health issue getting viral

அதனைத் தொடர்ந்து, வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

25 திற்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ராஜேந்தர், இவரது சென்டிமென்ட் காட்சிகளுக்காகவே இவர் பேமஸ்.

Simbu releases press release on t rajendar health issue getting viral

மேலும், கவன் ‘ஹாப்பி நியூ இயர்’, தெறி ‘ராங்கு’, ஒஸ்தி ‘கலசலா’, வல்லவன் ‘அம்மாடி ஆத்தாடி’ போன்ற பிரபல பாடல்களையும் பாடியுள்ளார். அமலா, நளினி, ஜோதி, மும்தாஜ், ஜீவிதா போன்ற பிரபல நடிகைகளை அறிமுகப்படுத்தியவர்.

Simbu releases press release on t rajendar health issue getting viral

இப்படி திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்து விளங்கிய, டி.ஆர். ராஜேந்தர் அவர்களின் மகன் சிலம்பரசன் என அனைவரும் அறிவர்.

தற்போது, உடல்நலம் சரியில்லாத காரணத்தினால், டி.ஆர். ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

Simbu releases press release on t rajendar health issue getting viral

இந்நிலையில், சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், பரிசோதனையில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால், உயர் சிகிச்சை தர வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்’.

Simbu releases press release on t rajendar health issue getting viral

இந்த தகவல் திரையுலகினரையும், ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Share this post