'வாரிசு' படத்துல சிம்பு பாட்டு மட்டும் பாடல.. ரசிகர்களை குதூகலப்படுத்திய செம ட்விஸ்ட்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
விரைவில் இந்த படத்தின் டீசர் அல்லது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ‘வாரிசு’ படத்தில் இருந்து ‘தீ தளபதி’ என்கிற இரண்டாவது சிங்கிள் பாடல் கடந்த டிசம்பர் 4ம் தேதி அறிவித்ததை போல வெளியானது. சிம்புவின் குரலில் உருவாகியுள்ள தீ தளபதி பாடல் வெளியாகி செம ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில், ’வாரிசு’ படத்தில் சிம்பு பாடியது மட்டுமின்றி ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ஒரு சிறு கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் வந்தது போலவே ’வாரிசு’ படத்தில் சிம்பு ஒரு சிறு கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.