ஜோதிகாவை ஒரு தலையாக காதலித்த பிரபல தமிழ் நடிகர்.. அதுனால தான் அந்த படத்துல நடிக்க வெச்சாரா..?
நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட பிரபல ஜோடி சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.
2006ம் ஆண்டு இவர்கள் திருமணத்திற்கு முன்னர் இணைந்து நடித்து வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இருவீட்டாரின் பெயரில் சம்மதம் பெற்று திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்து வருகிறார் ஜோதிகா.
திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் நடித்தார்.
இந்நிலையில், தற்போது திடீரென நடிகை ஜோதிகாவை அவரது திருமணத்திற்கு முன் வாரிசு நடிகர் ஒருவர் துரத்தி துரத்தி ஒருதலையாக காதலித்ததாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. சூர்யா - ஜோதிகா இருவரும் காதலித்து வந்ததால், அந்த நடிகரின் ஆசை நிறைவேறவில்லை என ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அவர் வேறு யாரும் அல்ல, நம் சிம்பு தான்.
நயன்தாரா, ஹன்சிகா, நிதி அகர்வால் என அடுத்தடுத்து டாப் நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்த சிம்பு ஜோதிகா அவர்களை ஒரு தலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தான் மன்மதன் படத்தில் அவரை நடிக்க வைத்தார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஜோதிகா, சூர்யா மீது மிகவும் தீவிரமான காதலில் இருந்ததால், சிம்பு காதல் ஒருதலை காதலாகவே போனதாக கூறப்படுகிறது.