'பிரதமர் மோடியை நேர்ல பாத்தா.. சார் டீ குடுத்துட்டு இருந்திருக்கலாமோனு தோணுதானு கேட்பேன்' சிம்பு ஓபன் டாக்
டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . சமீபத்தில், இவர் நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிம்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில் அவரிடம் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. இதற்கு செம கூலாக அவர் பதிலும் அளித்திருக்கிறார். அதன்படி முதலில், தமிழ்நாட்டில் தாமரை மலருமா.. மலராதா என ரசிகை ஒருவர் கேட்டுள்ளார். பாஜக-வை சூசகமாக சுட்டிக்காட்டி தான் இந்த கேள்வி அவரிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சிம்பு, பொதுவாக எடுத்துக்கொண்டால் தாமரை தண்ணி ஊற்றினாலே வளரும் என தனக்கே உரித்தான பாணியில் சிம்பு அளித்த பதிலை கேட்டு அனைவரும் சிரித்தனர்.
அடுத்ததாக, மற்றொரு ரசிகை ஒருவர், மோடியை பார்த்தால் என்ன கேள்வி கேட்பீங்க என கேட்க, இதற்கு சிம்பு அளித்த பதில் தான் அல்டிமேட். மோடியை பார்த்தால், சார் டீ-யே குடுத்துட்டு இருந்திருக்கலாமோனு தோணுதா சார்னு கேட்ருப்பேன் என சொல்லிவிட்டு சிம்பு குலுங்கி குலுங்கி சிரித்தார். இதையடுத்து ரசிகர் ஒருவர் சிம்புவிடம், உங்களது வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில், உங்களது தாயார் எவ்வளவு உதவியாக இருந்துள்ளார் என்பது பற்றி கேட்டதற்கு பதிலளித்த சிம்பு, பீப் பாடல் சர்ச்சையின் போது நடந்த சிலவற்றை கூறினார்.
அந்த சர்ச்சைக்கு முன்பு வரை என அம்மா ஒரு பேட்டி கூட கொடுத்ததில்லை. அந்த சமயத்தில் உலகமே எனக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் எனக்காக உடனிருந்து குரல் கொடுத்தது என்னால் மறக்க முடியாது என சிம்பு கூறினார். பின்னர் ரசிகை ஒருவர், உங்க வீடு தான் பிக்பாஸ் என்றால் உங்க கூட யாரெல்லாம் இருக்கணும்னு நினைப்பீங்க என கேள்வி கேட்டார். இதற்கு சட்டென பதிலளித்த சிம்பு, என் வாழ்க்கையே பிக்பாஸ் தாங்க, நான் எதையும் மறைச்சதில்ல என கூறினார். இவ்வாறு சிம்பு ஓப்பனாக பேசிய அந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.