மேடையில் கமல் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சிம்பு.. கண்டு ரசித்த கமல்.. வைரலாகும் வீடியோ !

Simbu dances for kamal song in vikram audio launch stage viral video

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் 4 வருட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.

அரசியல், பிக் பாஸ், சமூக பணி என இருந்த கமல் ஹாசன் அவர்கள், கைதி, மாஸ்டர் போன்ற படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் போன்றோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Simbu dances for kamal song in vikram audio launch stage viral video

இதன் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பட குழுவினர் லோகேஷ் கனகராஜ், அனிருத், கமல் ஹாசன், சிறப்பு விருந்தினர்களாக சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

விக்ரம் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதில் பங்கேற்ற அனைவரும் பேசிய நிலையில், சிம்பு, விக்ரம் படத்தில் கமல் எழுத்து மற்றும் குரலில் வெளியான பத்தல பத்தல பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது மிக வைரல் ஆகி வருகிறது.

அவருடன், இப்படத்திற்கு நடன இயக்குனராக பணியாற்றிய சாண்டி மாஸ்டரும் ஆடியுள்ளார். இதனை கமல் ஹாசன் அவர்கள் கண்டு ரசித்தனர்.

Share this post