சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் சமந்தா.. வெளியான புகைப்படங்கள் இதோ..

simbu and samantha romantic photos getting trending

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

simbu and samantha romantic photos getting trending

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

simbu and samantha romantic photos getting trending

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

simbu and samantha romantic photos getting trending

இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இதுமட்டுமின்றி ஹிந்தியிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகை சமந்தா பிரபல நடிகர் சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் சில போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu and samantha romantic photos getting trending

simbu and samantha romantic photos getting trending

simbu and samantha romantic photos getting trending

Share this post