சிம்புவுடன் டேட்டிங் செய்த ஹன்சிகா.. லீக்கான போட்டோஸ்.. ட்ரெண்டிங் செய்தியான ஹன்சிகா
தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.
ஷக்கலக்கா பூம் பூம் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போல கொழுமொழுக் பெண்ணாக இருந்த இவரை “சின்ன குஷ்பு” “குட்டி குஷ்பூ” என கோலிவுட் வட்டாரம் செல்லமாக அழைத்து வந்தது. இந்நிலையில், தற்போது, செம பிட்டாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் இவரது 50வது படமான மஹா வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 3 படங்கள் உள்ளன. இந்நிலையில், சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் திருமணம் குறித்த செய்தி தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்துகொள்ள தயாராகி உள்ளனர். தனது வருங்கால கணவருடன் பாரிஸில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவர் முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டார்.
இந்நிலையில், சொஹைல் கதூரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்தானது தெரிய வந்துள்ளது. ரிங்கி என்கிற பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார் சொஹைல். அந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. கோவாவில் நடந்த சொஹைல், ரிங்கியின் திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவும் வெளியாகியிருக்கிறது.
சொஹைலின் முதல் திருமண புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, சொஹைலின் முன்னாள் மனைவி ரிங்கி ஹன்சிகாவின் தோழி போன்று தெரிகிறதே. இந்த சொஹைலை நம்பியா திருமணம் செய்யப் போகிறார் ஹன்சிகா? அது சரி அவர் வாழ்க்கை, அவர் இஷம்டம். இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க ஹன்சுமா. எல்லோரையும் நம்பிவிட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார் சொஹைல். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தான் ஹன்சிகாவுக்கும், சொஹைலுக்கும் இடையே பழக்கம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹன்சிகா ஏற்கனவே நடிகர் சிம்புவை காதலித்தார். டேட்டிங்கில் இருந்த இவர்கள் இருவரின் பர்சனல் போட்டோக்களும் இணையத்தில் கசிந்தது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகர் சிம்பு, பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் இருவரும் அஜித் ஷாலினி போல் வாழ்வோம் என்றும் கூறினார். ஆனால் ஹன்சிகாவின் தாயார் அவர்களின் காதலை ஏற்கவில்லை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அடுத்த சில நாட்களிலேயே இருவரும் தங்களின் காதல் முறிந்ததாக அறிவித்தனர். ஆனால் பிரேக்கப்பிற்கான காரணத்தை இருவரும் சொல்லவில்லை.
இதேபோல் 2019ம் ஆண்டு ஹன்சிகாவின் பிரைவேட் போட்டோக்கள் சிலவும் வெளியாகி பரபரப்பை கிளப்பின. பின்னர் அந்த போட்டோக்கள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன.