தற்கொலைக்கு முன் நடிகை சில்க் ஸ்மிதா எழுதிய கடிதம்.. இவ்வளவு சோகம்.. ஏமாற்றமா? தீயாய் பரவும் போட்டோ

Silk smitha suicide letter getting viral on social media

சில்க் ஸ்மிதா என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவரை ஒரு கவர்ச்சி நடிகையாக உருவகப்படுத்தி வந்த பலரும், அவரது உண்மை வாழ்க்கை சூழ்நிலை தெரிந்து கொண்டு தற்போது அவரை புகழ்ந்து வருபவரும் உண்டு. 80ஸ் களில் நிறைய பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார்.

Silk smitha suicide letter getting viral on social media

குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதிலேயே திருமண வாழ்க்கையில் நுழைந்த இவருக்கு அந்த வாழ்க்கையும் நன்றாக அமையவில்லை. பின்னர், வீட்டை விட்டு வெளியேறி மேக் அப் ஆர்டிஸ்ட்டாக திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், சின்ன சின்ன கிடைத்த கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Silk smitha suicide letter getting viral on social media

பிரபல இயக்குனரான வினு சக்ரவர்த்தி இவருக்கு பல பிரபல கதாபாத்திரங்களை கொடுத்து, தனது மனைவி மூலம் அவருக்கு நடன கலையை கற்றுக்கொடுத்து தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.

Silk smitha suicide letter getting viral on social media

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் பிரபலம் அடைந்தவர். தனது கிளாமர் லுக் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், நிறைய பிரபல ரோல்களில் நடித்துள்ளார். பின்னர், 1996ம் ஆண்டு, யாரும் எதிர்பாராத விதமாக, சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார்.

Silk smitha suicide letter getting viral on social media

1979ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் 1996ம் ஆண்டு வரை தொடர்ந்து நடித்து வந்தார். சில்க் ஸ்மிதா இறக்கும் போது அவருக்கு வயது 35. அவரது இறப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இப்போதும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் பலரும் சில்க் ஸ்மிதாவை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

Silk smitha suicide letter getting viral on social media

தற்கொலை செய்வதற்கு முன் சில்க் ஸ்மிதா தனது கைபட தெலுங்கில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். நடிகையாக மிகவும் கஷ்டப்பட்டேன், என்னை யாரும் நேசிக்கவில்லை, என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆசைகள் உள்ளது, ஆனால் நான் எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை.

Silk smitha suicide letter getting viral on social media

5 வருடங்களாக ஓருவர் எனக்கு வாழ்வு தருவதாக கூறினார். ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தைகள் தான். நான் களைத்துப் போனேன். இந்த கடிதம் எழுத கூட மிகவும் சிரமப்பட்டேன் என முழுவதும் சோகமான விஷயங்களை கூறியிருக்கிறார். அந்த கடிதத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Silk smitha suicide letter getting viral on social media

Share this post