போட்டோ பதிவிட்டு காதலை உறுதி செய்த சித்தார்த்.. வைரலாகும் பதிவு !
பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார். தமிழில், அடடா அடடா (சந்தோஷ் சுப்பிரமணியம்), பார்வதி பார்வதி (காதலில் சொதப்புவது எப்படி) போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.
பல விளம்பர படங்களிலும் அவ்வப்போது நடித்துள்ள சித்தார்த், நீண்ட காலமாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவது இவரது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நல்ல கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்றால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரபல முன்னணி நடிகையுடன் காதல் கொண்டிருப்பதாக இவர் பெயர் அடிபட்டு வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ்.
இப்படத்தைத் தொடர்ந்து, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், நடிகர் சித்தார்த்தை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் ‘மஹாசமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் இப்போது காதலாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவ்வபோது இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள ஹோட்டலில் இவர்கள் வெளியேறி ஒரே காரில் சென்ற வீடியோ வைரலானது. இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஆகிய இருவரும் தாங்கள் காதலிப்பதாகவோ, டேட்டிங் செய்வதாகவோ, வெளிப்படையாக ஏதும் அறிவிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிதி ராவ் தனது 36வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதை ஒட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், அதிதி ராவ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த சித்தர் தனது இதயராணிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இவர்களின் காதலை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.