மாயோன் படத்துக்கு 'U' சான்றிதழ் ! விரைவில் வெளியாகவிருக்கும் ரிலீஸ் அப்டேட் !

Sibiraj and tanya film maayon gets u certificate

தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக ‘மாயோன்’ எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

Sibiraj and tanya film maayon gets u certificate

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட சார்பில் நடிகர் சிபி மற்றும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாயோன்’. இப்படத்தின் டீசர் வெளியாகியது.

Sibiraj and tanya film maayon gets u certificate

‘மாயோன்’ படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. அதில் புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Sibiraj and tanya film maayon gets u certificate

இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தெய்வீக பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக தற்போது படக்குழு ‘ஆடியோ விளக்க’ பாணியிலான திரைப்பட பதிப்பில் ஈடுபட்டுள்ளது.

விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post