லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கூட்டணி.. சூப்பர்ஸ்டார் படத்தில் இணைந்த வாரிசு நடிகை..!

shruti-haasan-joins-rajinikanth-coolie-06072024

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர். முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.

இந்நிலையில், தலைவர் 171 படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. தலைவர் 171 படத்தில் அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக கமிட் ஆகியுள்ளார். தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது, மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என லோகேஷ் சமீபத்திய பிரஸ்மீட் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

shruti-haasan-joins-rajinikanth-coolie-06072024

முன்னதாக, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் ஒரு படத்திற்கு ரூபாய் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், ரஜினி மற்றும் விஜய் இடையே தான் சம்பள விசயத்தில் போட்டி நிலவுகிறது. அதாவது, ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படத்திற்காக ஷேர் தொகை உட்பட மொத்தம் 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே, நடிகர் விஜய்க்கு கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தில் நடிக்க அவருக்கு 250 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக பேச்சு அடிபட்டது. இதன் மூலம் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல் விஜய் முதல் இடத்தை பிடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த இடத்தை தட்டிப் பறித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதாவது, அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள கூலி படத்திற்காக அவருக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் 250 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் கூலி படத்தில் தான் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இன்று கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கும் நிலையில் அதில் ஸ்ருதி ஹாசனும் கலந்துகொண்டு இருக்கிறார்.

Share this post