இப்படித்தான் ஒர்க்-அவுட் செய்வீங்களா..? உள்ளாடையோடு.. காதலனுடன் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட செம்ம போட்டோ..!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற தனி அடையாளத்தை கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
2000ம் ஆண்டு தனது தந்தையின் சூப்பர் ஹிட் படமான ‘ஹே ராம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், 2009ம் ஆண்டு, ‘லக்’ என்னும் பாலிவுட் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழில் உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். பின்னர், சூர்யாவுடன் இவர் நடித்த ‘7ஆம் அறிவு’ படம் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.
விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். 3, வேதாளம், புலி, பூஜை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது சினிமா பயணத்தில் தனுஷ் உடன் இவர் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் இவருக்கு பெரிய மைல்கல் ஆனது.
சர்ச்சைக்கு பெயர்போன ஸ்ருதி, தனது கவர்ச்சி உடை, கிளாமரான போஸ் கொடுத்து போட்டோஷூட் என இணையத்தை திணறடித்து இளசுகளை திண்டாட வைத்தும் வருகிறார். இந்நிலையில், தனது மார்க்கெட்க்காக தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவவ்போது பதிவிட்டு வருகிறார்.
மேலும், பெற்றோரை விட்டு தனியே வசித்து வரும் ஸ்ருதி, தற்போது தனது நண்பர் ஒருவரை காதலித்து வருகிறார். அவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ என பதிவிட்டு வருகிறார்.
தற்போது தமிழில் ஒரு படம் கூட இவரது கை வசம் இல்லை என்றாலும், தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய காதலருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், காதலர் சாந்தனுவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளாடையோடு வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் இருவருமே படு ரொமான்டிக்காக உள்ளனர்.