நெட்டிசன்களால் ட்விட்டர் விட்டு விலகிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. வைரலாகும் பதிவு.. இப்டிலாம் ட்ரோல் பண்லாமா ?
மலையாள மொழியில் வெளியான கோஹினூர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதனைத் தொடர்ந்து, கன்னட மொழியில் U - Turn திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் செம பிரபலம் அடைந்தார். இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட போது சமந்தா நடித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழில் அறிமுகமான காற்று வெளியிடை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, இவன் தந்திரன், விக்ரம் வேதா, கே 13, சக்ரா, மாறா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ், மலையாளம் மட்டுமல்லாது கன்னடா, ஹிந்தி, தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனது கிளாமர் பக்கத்தை காட்டத் தொடங்கியுள்ளார். அதில் தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது, திடீரென ஷ்ரத்தா ஸ்ரீநாத் இனி ட்விட்டர் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேன் என போட்டுள்ள ட்வீட்டை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனது பெயரை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என மாற்றிக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.
ரமா என்பது தனது அம்மா பெயர் என்றும் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே மாற்றி விட்டேன், தற்போது ட்விட்டரிலும் மாற்ற முடிவு செய்திருக்கிறேன் என பதிவிட்டார். ஆனால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் கலாய்க்கத் தொடங்கினர். பாலிவுட்டில் ஷ்ரத்தா கபூர், ஷ்ரத்தா தாஸ் என ஏகப்பட்ட நடிகைகள் அந்த பெயரில் இருந்தாலும், சரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் என தன்னை அடையாளம் காணும் ரசிகர்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டு இருந்தார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை தொடர்ந்து ரசிகர்கள் ட்ரோல் செய்த வண்ணம் இருந்ததால் திடீரென கடுப்பாகி ஆள விடுங்கப்பா சாமி இனிமேல் ஒரு 4 மாசத்துக்கு ட்விட்டர் பக்கமே வரமாட்டேன் என ஆவேசமாக போட்ட ட்வீட்டையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
அப்படியே தினமும் ட்விட்டரில் பல அப்டேட்களை கொடுத்து டிரெண்டிங்கில் இருக்கீங்க, நீங்க வரலைன்னா ட்விட்டர் நஷ்டமாகி விடும் என வச்சு செய்து வருகின்றனர்.இன்னும் சிலர், நெகட்டிவிட்டியை கண்டுக்காமல் விட்டுவிடுங்க, உங்க பட வேலையை கவனியுங்க என ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். ருத்ர பிரயாக் எனும் கன்னட படத்திலும், கலியுகம் எனும் தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.