அம்மா சொன்ன வார்த்தைக்காக காதலை விட்டுக்கொடுத்த ஷிவின்.. கதையை கேட்டு கண்கலங்கிய ரக்ஷிதா
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி வரும் போட்டியாளர்கள் அவ்வப்போது தங்களுடைய கஷ்டங்கள், வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான விஷயங்கள், காதல், பிரிவு போன்றவற்றை தங்களுக்கு நம்பிக்கையான நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவரும் திருநங்கை போட்டியாளரான ஷிவின், ரக்ஷிதாவிடம் தன்னுடைய காதல் கதை குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
மேலும் இந்த காதல் வாழ்க்கையில் இருந்து ஏன்? விலகினேன் என்பதையும் தெரிவித்துள்ளார். அம்மாவின் வார்த்தையில் இருந்த உண்மையை புரிந்து கொண்ட ஷிவின், தன்னுடைய காதலரிடம் இருந்து விலகியதோடு, அவரிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாராம். ஆனால் அவருடைய காதலன் பல முறை இவரிடம் பேச முயற்சித்துள்ளார். தற்போது சில கெட்டபழக்கத்திற்கு ஆளாகி அவர் சிங்கப்பூரில் வசித்து வருவதாக ஷிவின் தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த அழகான வலி நிறைந்த காதல் கதையை கேட்டு ரக்ஷிதா கண்கலங்கி அழுதுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் கதை இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்து வருகிறார்கள். பிக்பாஸ் போட்டியை சரியாக புரிந்து கொண்டு விளையாடி வரும் போட்டியாளர்களில் ஒருவர் ஷிவின், பொம்மை டாஸ்கில் கூட இவருடைய விளையாட்டை பார்த்து, தொகுப்பாளர் கமல்ஹாசன் வெகுவாக பாராட்டியதோடு, ஒரு அண்ணனாக உங்களுடன் நான் இருக்கிறேன் என கூறி உற்சாகபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Shivin love story 😍😍
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 12, 2022
Part1#BiggBossTamil6 pic.twitter.com/1y7Gu99aZE
Part8#BiggBossTamil6 pic.twitter.com/KxeLUiW6Ba
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 12, 2022