பாக்கியலட்சுமி சீரியலில் பிக்பாஸ் புகழ் அசீம்.. வைரலாகும் போட்டோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்கள் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.
இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.
பாக்கியா - கோபி விவாகரத்து, கோபி - ராதிகா திருமண வாழ்க்கை, அம்ரிதா - எழில் காதல், இனியா மற்றும் தாத்தா கோபியை படுத்தும் பாடு என சுவாரஸ்யமாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கணவர் ஏமாற்றிவிட்டார், பிரிந்துவிட்டோம் சமூதாயம் என்ன சொல்லும் என இன்றும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெண்களுக்கு இந்த தொடர் முக்கியமானதாக உள்ளது. தற்போது பாக்கியா கோபியை விவாகரத்து செய்து தனது குடும்பத்தையும், தொழிலையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இன்றைய எபிசோடில் பாட்டி, ஜெனி, செல்வி, எழில் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்கிறார்கள். அதில் பிக்பாஸில் விளையாடி வரும் அசீம் நடித்துள்ள சீரியலின் காட்சிகள் காட்டப்படுகிறது. அதில் ஷிவானியும் இருக்கிறார்,.எனவே அந்த காட்சி பகல் நிலவு தொடரில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த புகைப்படம் செம வைரல் ஆகி வருகிறது.