பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி ? 20 வருடங்களுக்கு பிறகு பிரம்மாண்ட படத்தில் கம்-பேக் !

Shalini to be part in maniratnam direction ponniyin selvan movie

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Shalini to be part in maniratnam direction ponniyin selvan movie

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

Shalini to be part in maniratnam direction ponniyin selvan movie

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது. பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.

Shalini to be part in maniratnam direction ponniyin selvan movie

இப்படி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த அஜித், காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் பிரபல நடிகை ஷாலினி. ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 50திற்கும் மேற்பட்ட படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Shalini to be part in maniratnam direction ponniyin selvan movie

7 வருட இடைவேளைக்கு பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த ஷாலினி, மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார். விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.

Shalini to be part in maniratnam direction ponniyin selvan movie

1999ல் அமர்க்களம் படப்பிடிப்பில் காதலில் விழுந்த அஜித் - ஷாலினி, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட இரு படங்களில் நடித்தார். அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

Shalini to be part in maniratnam direction ponniyin selvan movie

நீண்ட இடைவெளிக்கு பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஷாலினி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பாகமாக உருவாகும் இப்படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Shalini to be part in maniratnam direction ponniyin selvan movie

இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அலைபாயுதே திரைப்படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ஷாலினி நடித்ததை தொடர்ந்து, தற்போது மணிரத்னம் வார்த்தைக்காக பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Share this post