கணவர் அஜித்திற்காக பக்தி பரவசத்தில் ஷாலினி.. தங்கையுடன் வரலக்ஷ்மி பூஜை!
2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் பேவரிட் ஹீரோயின்களுள் ஒருவராக இருந்து வந்தவர்தான் நடிகை ஷாலினி. முதன் முதலில் மலையாளத் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு காதலுக்கு மரியாதை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் .
இந்த படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 1997-ல் வெளிவந்த இந்த திரைப்படம் ஷாலினிக்கு மிகப்பெரிய அறிமுக படமாக அமைந்தது. அதை அடுத்து தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் நடித்து வந்தார். பின்னர் அஜித்திற்கு ஜோடியாக அமர்க்களம் திரைப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.
ஷாலினி தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு ,அலைபாயுதே ,பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக. பார்க்கப்பட்டார் இதனிடையே இவர் நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் .
திருமணத்திற்கு பிறகு நடிப்பதையே விட்டுவிட்டார். இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் சமீப நாட்களாக ஆக்டிவாக இருந்து வரும் ஷாலினி தற்போது தனது தங்கையான ஷாமிலி உடன் வரலட்சுமி பூஜை செய்த புகைப்படங்களில் தனது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எல்லோரும் அவருக்கு லைக்ஸ் குவித்து வருவதோடு தல அஜித் சார் போட்டோவும் போட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும் என கூறி வருகிறார்கள்.. அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.