அடச்சீ.. ஒரு பொண்ணு கிட்ட இப்படி கூடவா நடந்துக்குவீங்க.. GV பிரகாஷ் பட நடிகை வேதனை..!
தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இவர் தமிழ், GV பிரகாஷ் ஜோடியாக 100 சதவீத காதல், மாதவன் நடித்த சைலன்ஸ் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மகாராஜ் என்ற இந்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களிலும் ஷாலினி பாண்டே நடித்து வருகிறார். என்னதான் படத்தில் நடித்தாலும், சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உண்மை. தற்போது, ஷாலினி பாண்டே இந்தி படங்களில் நடித்தவரும் நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்கும் போது என்னை நிறைய பேர் உடல் கேலி செய்தார்கள்.
அப்போது, நான் கொஞ்சம் அதிக எடை கொண்டிருந்தேன். மேலும், என் மேனேஜர்கள் என்னுடைய அப்பாவித்தனத்தை தவறாக பயன்படுத்தி பல படங்களின் நடிக்க சொல்லி என்னை ஏமாற்றினார்கள். அந்த நேரத்தில், எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய குடும்பம் மட்டும் தான் என்று ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.