ஷாலினியின் பிறந்தநாள் பார்ட்டி.. பங்கேற்ற பிரபலங்கள்.. ரொமான்டிக் ஜோடியின் சூப்பர் போட்டோஸ் வைரல்!
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது. பல ஆண்டுகள் கழித்து அஜித் துணிவு படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.
இப்படி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த அஜித், காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் பிரபல நடிகை ஷாலினி. ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 50திற்கும் மேற்பட்ட படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
7 வருட இடைவேளைக்கு பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த ஷாலினி, மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார். விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.
1999ல் அமர்க்களம் படப்பிடிப்பில் காதலில் விழுந்த அஜித் - ஷாலினி, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட இரு படங்களில் நடித்தார். அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடிகை ஷாலினியின் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சோபாவில் அமர்ந்திருக்கும் ஷாலினி அருகே அஜித் நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை வைரலாக்கி வரும் ரசிகர்கள், இருவரும் செம்ம ஜோடி என புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.