அஜித் - ஷாலினி திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை.. 3 மாதம் தள்ளி போன திருமணம்.. வைரலாகும் பேட்டி !

Shalini and ajith marriage last minute issues shared by director perarasu

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள். அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை. பைக் ரேஸ், நகை திருட்டு, போதை பழக்கம் போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கலப்படமான விமர்சனங்களை பெற்றது.

Shalini and ajith marriage last minute issues shared by director perarasu

இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் பிரபல நடிகை ஷாலினி. ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 50திற்கும் மேற்பட்ட படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

7 வருட இடைவேளைக்கு பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த ஷாலினி, மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார். விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.

1999ல் அமர்க்களம் படப்பிடிப்பில் காதலில் விழுந்த அஜித்-ஷாலினி, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட இரு படங்களில் நடித்தார். அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நட்சத்திர தம்பதி பற்றி அதிகம் அவ்வப்போது திரையுலகத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பேசப்படுவது வழக்கம். இந்நிலையில் அஜித், ஷாலினி திருமணத்தில் நடந்த தொடர் பிரச்சனை குறித்து இயக்குனர் பேரரசு தனியார் யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Shalini and ajith marriage last minute issues shared by director perarasu

அதாவது திருமணத்திற்கு பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதில்லை என்று ஷாலினி முடிவெடுத்து இருந்தார். அதே சமயம், ஷாலினி ஒப்பந்தமாகி இருந்த பிரியாத வரம் வேண்டும் படத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடிக்க வேண்டிய காட்சிகள் பேலன்ஸ் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது நடிகர் பிரசாந்தின் கால்ஷீட் கிடைக்காததால் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததுள்ளது.

பிரியாத வரம் வேண்டும் படத்தில் இருந்த மூன்று நாட்கள் மீதமுள்ள காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவில் இருந்தார் ஷாலினி.

ஜனவரி மாதம் வைக்க இருந்த திருமணம், அதன் பிறகு 3 முறை தொடர்ந்து தேதிகள் தள்ளி வைக்கப்பட்டதால் பொறுமை இழந்தவர் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு படப்பிடிப்பை சீக்கிரம் நடத்தி முடிக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மீதமுள்ள காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் திருமணம் செய்யவிருந்த ஷாலினி இந்த ஷூட்டிங் காரணத்தினால் ஏப்ரல் மாதம் அஜித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார் என அவர்கள் திருமணத்தில் நடந்த பிரச்சனை குறித்து இயக்குனர் பேரரசு பகிர்ந்துள்ளார். இந்த பேட்டி குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Shalini and ajith marriage last minute issues shared by director perarasu

Shalini and ajith marriage last minute issues shared by director perarasu

Share this post