கண்ட இடத்தில் தொட்டு…. அதுல முதல் ஆளே நான் தான் - அதிர வைக்கும் ஷகிலாவின் பாலியல் புகார்!
திரைப்படத்துறையில் நடிகைகள் தங்களுக்கு தெரிந்த பாலியல் தொல்லைகளை குறித்து பொதுவெளியில் வந்து தற்போது வெளிப்படையாக கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் கேரள சினிமாவில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
ஹேமா கமிட்டி என்ற ஒரு குழுவை அமைத்து நடிகைகள் கொடுத்த பாலியல் புகார்கள் தற்போது அடுத்தடுத்து வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்துவதோடு இதில் பல முக்கிய பிரபலங்கள் சிக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஷகிலா மலையாள திரைப்பட உலகில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து பகீர் கிளப்பி இருக்கிறார். அவர் கூறியதாவது… மலையாள சினிமா உலகில் இந்த மாதிரியான பாலியல் ரீதியான பிரச்சனையை சந்தித்த முதல் நபரே நான் தான்.
2000 ஆண்டிலிருந்து படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போதிலிருந்து என்னுடைய படத்தை வெளியிடவில்லை என்னுடைய படத்திற்கு தொடர்ந்து தடை விதித்தார்கள். என்னைப் பற்றி பல புகார்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது .
ஒட்டுமொத்தமாக மொத்த பேரும் என்னை சேர்ந்து முடக்கி விட்டார்கள். மலையாள நடிகர் சங்கம் அம்மா தான் இது எல்லாவற்றிற்கும் காரணம். இது எல்லாம் அந்த சங்கத்தில் இருந்த ஒரே ஒரு நடிகர் தான் காரணம் என தெரிய வந்தது.
நானே மலையாள படமே வேண்டாம் என்று வெறுத்துப் போகும் அளவுக்கு எனக்கு அவ்வளவு டார்ச்சர் பிரச்சனை கொடுத்தார்கள். அப்படி நான் என்ன தவறு செய்தேன்? என்று எனக்கு புரியவில்லை. அப்படி ஒரு ஆணாதிக்கம் நிறைந்த நிறைந்தது கேரள சினிமா உலகம் .
அதுமட்டுமில்லாமல் என்னுடைய முதல் படத்திற்கு எனக்கு ஒருவர் மேக்கப் போட வந்தார். அப்போது நான் பிகினி உடை அடைந்து கொண்டு இருந்தேன். அப்போது கண்ட இடத்தில் என்னை தொட்டு சித்தரவதை செய்தார். “கோல்மால்” என்ற படத்தில் நடித்தேன்.
அப்படத்தின் காஸ்டியூம் டிசைனர் என் வீட்டுக்கு வந்து அளவு எடுத்தார். அப்போதும், அவர் அசிங்கமாக தான் என்னிடம் நடந்துக்கொண்டார். இப்படி பல அசிங்கங்கள் சினிமாவில் இருக்கு என்று நடிகை ஷகிலா அந்த பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.