என்னது.. ’காவி’ பிகினியா? காவி'ல கவர்ச்சியா? சர்ச்சையை கிளப்பிய பாடல் வீடியோ.. ஷாருக்கானுக்கு வந்த சோதனை!

shahrukhan and deepika padukone hot dance in kaavi and green dress getting slammed by several people and community group

ஹ்ரித்திக் ரோஷனின் ‘வார்’ படத்தை இயக்கிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பதான். இப்படத்திலிருந்து பெஷாராம் ரங் பாடல் நேற்று வெளியானது. அந்த பாடலில் பிகினி உடைகளில் நடிகை தீபிகா படுகோன் ஆடியுள்ள கவர்ச்சி ஆட்டம் ஆபாச நடிகைகள் ஆடுவதை போல இருப்பதாகவும், சாஃப்ட் பார்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர் என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

shahrukhan and deepika padukone hot dance in kaavi and green dress getting slammed by several people and community group

கவர்ச்சியை குறைத்து நடித்து வந்த தீபிகா படுகோன் மீண்டும் கிளாமர் ரூட்டுக்கு கெஹ்ரியான் படம் திரும்பினார். ஷாருக்கானின் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள பெஷாராம் பாடலில் அவர் காவி நிற பிகினியை அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பதை ஏகப்பட்ட இந்து அமைப்புகள் கண்டித்து வருகின்றன. இந்த சர்ச்சையை தற்போது கையில் எடுத்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கிளம்பி உள்ளது. மத்த கலரு கண்ணுக்கு தெரியலையா பிகினி என்பதை தாண்டி வித விதமான ‘தாங்’ உடைகளை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை தீபிகா படுகோன் நடனமாடி உள்ளார்.

shahrukhan and deepika padukone hot dance in kaavi and green dress getting slammed by several people and community group

தங்க நிறம், மஞ்சள் நிறம், நீல நிறம் என பல வண்ணங்களில் பிகினி அணிந்து தீபிகா படுகோன் இந்த பாடலுக்கு நடனமாடி உள்ள நிலையில், திட்டமிட்டே ஷாருக்கான் படம் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்க ‘காவி’ சர்ச்சையை கிளப்புகின்றனர் என ஷாருக்கான் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தீபிகா படுகோன் காவி நிற பிகினி அணிந்து கவர்ச்சி ஆட்டம் போட அவருடன் படு நெருக்கமாக பச்சை நிற ஷர்ட் அணிந்து ஷாருக்கான் ஆடியிருப்பது மறைமுகமாக பாகிஸ்தான் கலரை அவர் குறியீடாக வெளிக்காட்டுகிறார் என பாய்காட் கேங் பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளது.

shahrukhan and deepika padukone hot dance in kaavi and green dress getting slammed by several people and community group

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு பாய்காட் கேங் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படம் தியேட்டர்களில் ஓடவே இல்லை. இதே நிலைமை வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள ஷாருக்கானின் பதான் படத்திற்கு நிலவுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் இந்த பாடல் அமைந்துள்ளது என்றும் பெஷாராம் என பாடல் வரிகள் இடம்பெற்றிருப்பது இந்து மதக் கடவுளை அவமதிக்கும் செயல் என நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

shahrukhan and deepika padukone hot dance in kaavi and green dress getting slammed by several people and community group

Share this post