சிகிச்சை பலனிக்கவில்லை?.. அமெரிக்கா பறந்த ஷாருக்கானுக்கு இப்படி ஒரு பிரச்சனை..!

பாலிவுட் இன் பாஷா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு இந்தியா முழுவதும் அவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக்கான் இன்றும் ஹிந்தியில் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் உலகத்தில் செல்வம் மிகுந்த நபர்களின் பட்டியலில் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார். ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு ஷாருக்கானுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில், உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டார். இதை தொடர்ந்து, தற்போது கண் தொடர்பான பிரச்சனையால் ஷாருக்கான் பாதிக்கப்பட்டதாகவும், மும்பையில் சிகிச்சை எடுத்து வந்த ஷாருக்கான், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், அவருக்கு கண்ணில் என்ன பிரச்சனை என்பது குறித்த விரிவான விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.