கனவு நிஜமானது.. அளவில்லா பூரிப்புடன் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ந்த ஷபானா!

shabana shares pic taken with thalapathy vijay in varisu audio launch with excitement and happiness

மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்தவர் நடிகை ஷபானா ஷாஜஹான். அதிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் குடும்ப தலைவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆனவர் ஷபானா.

shabana shares pic taken with thalapathy vijay in varisu audio launch with excitement and happiness

மலையாள தொடரான ‘விஜயதசமி’ மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், பார்வதி என்னும் ரோலில் நடித்து, தனது நடிப்பின் மூலம் சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து தந்த சாதனை இவரை சேரும். Cute doll போல இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இளைஞர்கள் பலர் இவரது சோசியல் மீடியா பக்கங்களை பின்தொடர்கின்றனர்.

shabana shares pic taken with thalapathy vijay in varisu audio launch with excitement and happiness

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகர் ஆர்யன் அவரை காதல் திருமணம் செய்தார் ஷபானா. ஆர்யன் வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதால் ஷபானா வீட்டில் ஒப்புதல் கிடைக்காத நிலையில், அவர்கள் திருமணத்தில் ஷபானாவின் குடும்பத்தினர் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.

shabana shares pic taken with thalapathy vijay in varisu audio launch with excitement and happiness

சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க, தற்போது சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் கவனம் செலுத்த துவங்கியுள்ள ஷபானா, விக்ரம் பிரபு நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

shabana shares pic taken with thalapathy vijay in varisu audio launch with excitement and happiness

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘வாரிசு’ படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்ட ஷபானா, தளபதி விஜய் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். விஜய்யை நேரில் பார்த்ததால் தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாக இவர் போட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

shabana shares pic taken with thalapathy vijay in varisu audio launch with excitement and happiness

shabana shares pic taken with thalapathy vijay in varisu audio launch with excitement and happiness

Share this post