நாங்க தனியா இல்ல.. 3 பேராக தல தீபாவளி கொண்டாடிய ஷபானா - ஆர்யன்.. அடடே.. இந்த போட்டோ பாருங்க !

shabana and aryan celebrated thala diwali with popular celebrity photos getting viral

மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்தவர் நடிகை ஷபானா ஷாஜஹான். அதிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் குடும்ப தலைவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆனவர் ஷபானா.

shabana and aryan celebrated thala diwali with popular celebrity photos getting viral

மலையாள தொடரான ‘விஜயதசமி’ மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், பார்வதி என்னும் ரோலில் நடித்து, தனது நடிப்பின் மூலம் சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து தந்த சாதனை இவரை சேரும். Cute doll போல இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இளைஞர்கள் பலர் இவரது சோசியல் மீடியா பக்கங்களை பின்தொடர்கின்றனர்.

shabana and aryan celebrated thala diwali with popular celebrity photos getting viral

இந்நிலையில், சமீபத்தில், பிரபல சீரியல் நடிகர் ஆர்யன் அவரை காதல் திருமணம் செய்தார் ஷபானா. அதன் வீடியோ கிளிப்ஸ் மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது. ஆர்யன் வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதால் ஷபானா வீட்டில் ஒப்புதல் கிடைக்காத நிலையில், அவர்கள் திருமணத்தில் ஷபானாவின் குடும்பத்தினர் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.

shabana and aryan celebrated thala diwali with popular celebrity photos getting viral

சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க, மிகவும் எளிமையாகவே கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வருடம் இந்த ஜோடி தனியாகவே தல தீபாவளியை கொண்டாடுவார்கள் என்று பலரும் கூறி வந்தனர்.

shabana and aryan celebrated thala diwali with popular celebrity photos getting viral

இதனால் ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘ யாரு சொன்னாங்க? நாங்க தனியா தான் தல தீபாவளி கொண்டாட போகிறோம் என்று, எங்களுடன் எப்போதும் இருப்பதற்கு நன்றி அப்பா எம் எஸ் பாஸ்கர் “ என்று பதிவு செய்துள்ளார். நடிகர் எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து ஷபானா - ஆர்யன் தங்களது தல தீபாவளியை கொண்டாடியுள்ளார்கள். அதன் புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

shabana and aryan celebrated thala diwali with popular celebrity photos getting viral

Share this post