தளபதி66 படத்தில் நடிப்பதை போட்டோ போட்டு உறுதி செய்த 90ஸ் பேவரைட் ஹீரோ..!

Shaam to act in thalapathy66 movie post done by team

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களே பெற்றது.

Shaam to act in thalapathy66 movie post done by team

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட பாடல்கள் பெரும் ஹிட் அடித்து சமூக வலைத்தளங்களில் ரெக்கார்ட் உருவாகியுள்ளது. தளபதி 66 திரைப்படம் குறித்து பீஸ்ட் வெளியாவதற்கு முன்பே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது.

Shaam to act in thalapathy66 movie post done by team

அதன்படி, தளபதி 66 படத்தை வம்சி இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ரஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நடிகை குறித்து இன்னும் முடிவாகவில்லை.

Shaam to act in thalapathy66 movie post done by team

சென்டிமென்ட் நிறைந்த குடும்பப் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் பூஜை ஏப்ரல் 6ம் தேதி போடப்பட்டு, இதைத் தொடர்ந்து சென்னையில் முதல் கட்டமாக சில நாட்கள் ஷுட்டிங் நடத்தப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 3ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

Shaam to act in thalapathy66 movie post done by team

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதில் நடிகர் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாகவும், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Shaam to act in thalapathy66 movie post done by team

90ஸ் பேவரைட் நடிகர் ஷ்யாம் இப்படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் என சொல்லப்பட்டு வந்த நிலையில், நடிகர் ஷாம் அதனை உறுதி செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Shaam to act in thalapathy66 movie post done by team

Share this post