'VJ சித்ரா மாதிரி நக்ஷத்ராவுக்கு நடக்கலாம்..' அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஸ்ரீநிதி ! வைரலாகும் வீடியோ

Serial actress srinidhi open talks about nakshatra and her marriage

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 7C சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இதனைத் தொடர்ந்து, பகல் நிலவு, வள்ளி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார்.

தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி என்னும் பிரபல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Serial actress srinidhi open talks about nakshatra and her marriage

சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வரும் ஸ்ரீநிதி, பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களுடன் புகைப்படங்கள் எடுப்பது வெளியே செல்வது மேலும் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து சாதாரணமாக இவர் கூறிய கருத்து அவரை பெரும் அளவில் திருப்பி பாதித்து விட்டது.

Serial actress srinidhi open talks about nakshatra and her marriage

அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும், மெசேஜ் மூலமாகவும் மோசமாக கமெண்ட் செய்தும் பேசி அவரை மனஉளைச்சலுக்கு ஆளாகியதாக, அவர் சந்தித்த இன்னல்கள், மனப்போராட்டங்கள் குறித்து வீடியோ பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சிம்புவை திருமணம் செய்ய ரெடி. எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் சிம்பு. இன்னைக்கு தான் புரிஞ்சது சிம்பு, எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்! லேட்டா தான் புரிஞ்சது ஆனா புரிஞ்சிடுச்சு.

Serial actress srinidhi open talks about nakshatra and her marriage

சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பி வந்தார்.

“ப்ளீஸ் வாங்க. வந்து சேர்த்து வைங்க, கத்துரதுக்கு எனர்ஜி இல்ல. எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! வேணும், பாக்கனும், இப்பவே” என சிம்பு வீட்டு வாசலில் இருந்து ஸ்டேட்டஸ் பதிவிட்டு வந்தார்.

Serial actress srinidhi open talks about nakshatra and her marriage

ஸ்ரீநிதியின் இந்த பதிவை தொடர்ந்து பல செய்திகள் இணையத்தில் உலா வந்தது. இதனை கண்டு அவரின் தந்தை ஸ்ரீநிதிக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநிதி ‘நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா.

சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு, நான் பொய் சொல்ல மாட்டேன் தானே’ என பதில் கூறியிருந்தார்.

Serial actress srinidhi open talks about nakshatra and her marriage

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாகவே சிம்புவை லவ் பண்றாரா இல்ல பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறாரா என்பது தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர். இந்த விஷயம் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

இதற்கு சிம்பு ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். எங்க தலைவன் இப்போ தான் சர்ச்சை எதுவும் இல்லாம, நிம்மதியா இருக்காரு. அது உங்களுக்கு பிடிக்கலையா ? பேமஸ் ஆக எவ்வளவோ வழி இருக்கு. ஒருத்தரை டேமேஜ் பண்ணி தான் பேமஸ் ஆகணுமா? என கண்டமேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர்.

Serial actress srinidhi open talks about nakshatra and her marriage

இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி இன்ஸ்டா லைவ் வீடியோவில் அவரது தோழி மற்றும் நடிகையான நக்ஷத்திரா குறித்து பேசி ஷாக் கொடுத்து இருக்கிறார்.

“நக்ஷத்திரா என் வீட்டில் தான் இரண்டு வருடங்கள் இருந்தார். கடந்த வருடம் டிசம்பரில் அவருக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் நக்ஷத்திரா இருக்கிறார். என்னை சந்திக்க விடுவதில்லை.

Serial actress srinidhi open talks about nakshatra and her marriage

விஜே சித்து தவறான ரிலேஷன்ஷிப்பை தேர்வு செய்ததால் அவருக்கு நடந்தது நக்ஷத்திராவுக்கும் நடக்கலாம். நான் இப்போதே இதை சொல்வது அதனால் தான்.”

“நக்ஷத்திராவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவர் இறந்தால் கூட அவரது சாவுக்கு நான் செல்லமாட்டேன்” எனவும் ஸ்ரீநிதி கூறி இருந்தார். இந்த வீடியோ மற்றும் அவர் பேசிய சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Share this post