நடிகை ரித்திகாவுக்கு திருமணம்.. அட மாப்பிள்ளையும் விஜய் டிவி'ல தான் இருக்காரு.. யார் தெரியுமா?

serial actress rithika soon get married and gives invitation to dd

விஜய் டிவி தொலைக்காட்சியில் சீரியல் அல்லது ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் என எதில் கலந்து கொண்டாலும், அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்துவிடும். அந்த வகையில், ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் Wild card என்ட்ரி போட்டியாளராக கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தியவர் ரித்திகா.

serial actress rithika soon get married and gives invitation to dd

இவர் சில தினங்கள் மட்டுமே விளையாடினாலும், பாலாவுடன் இவர் அடித்த லூட்டியில், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். ரித்திகா விஜய் டிவி தொலைக்காட்சியில், ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார். பின்னர், ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது இல்லத்தரசிகள் மத்தியில் மிக பேமஸ்.

serial actress rithika soon get married and gives invitation to dd

சிவா மனசுல சக்தி, சாக்லெட், திருமகள் போன்ற சீரியல்களில் நடித்துள்ள இவர், சில நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ரித்திகாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இது குறித்து பிரபல தொகுப்பாளினி டிடி திருமணப் பெண்ணை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

serial actress rithika soon get married and gives invitation to dd

சில வாரங்களாக வதந்தியாக இந்த செய்தி பரவி வந்த நிலையில், தற்போது டிடி இதனை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக உறுதியாகியுள்ளது. மேலும் ரித்திகா டிடிக்கு அழைப்பிதழ் கொடுக்க தான் அவருடைய வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

serial actress rithika soon get married and gives invitation to dd

ரித்திகாவை திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளையின் பெயர் வினு என்றும், இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் கிரியேட்டிவ் புரோடியூசராக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுளளது. விரைவில், திருமணம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் ரித்திகாவின் திருமண செய்தி வெளியாகியுள்ளதால் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share this post