விஜய் டிவி பிரபலத்தை திருமணம் செய்துகொண்ட ரித்திகா.. வைரலாகும் போட்டோஸ்

விஜய் டிவி தொலைக்காட்சியில் சீரியல் அல்லது ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் என எதில் கலந்து கொண்டாலும், அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்துவிடும். அந்த வகையில், ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் Wild card என்ட்ரி போட்டியாளராக கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தியவர் ரித்திகா.
இவர் சில தினங்கள் மட்டுமே விளையாடினாலும், பாலாவுடன் இவர் அடித்த லூட்டியில், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். ரித்திகா விஜய் டிவி தொலைக்காட்சியில், ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார். பின்னர், ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது இல்லத்தரசிகள் மத்தியில் மிக பேமஸ்.
சிவா மனசுல சக்தி, சாக்லெட், திருமகள் போன்ற சீரியல்களில் நடித்துள்ள இவர், சில நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ரித்திகாவிற்கு மிகவும் எளிய முறையில், கோவிலில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கொண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. விஜய் டிவியில் கிரியேட்டிவ் புரடியூசராக பணியாற்றி வரும் வினு என்பவரை தான் ரித்திகா திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. ரித்திகாவின் திருமண புகைப்படத்திற்கு கமெண்டில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.