47 வயதில் 2ம் திருமணம்? நடிகையின் விளக்கம் வைரல்
தமிழில் 1994ம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியான “வீட்ல விசேஷம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. இப்படத்தை தொடர்ந்து, தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். சசிகுமாரின் தாரை தப்பட்டை, நடித்து இனிமே இப்படித்தான், கெத்து உள்ளிட்ட சில படங்களில் அம்மாவாக நடித்து இருந்தார்.
மேலும் பெண், வம்சம் நதிச்சரமி போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய 20 வயதில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்தி கொண்டு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்டனர். இதனையடுத்து நடிகை பிரகதி தனது இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் 2ம் திருமணம் செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்து இந்த கேள்விக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை பிரகதி. அவர் கூறுகையில் `தனக்கு தற்போது 47 வயதாகிவிட்டது. இந்த வயதில் நான் திருமணம் என்ற வார்த்தயை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய பல காலங்களை நான் தனிமையில் கடந்து வந்து விட்டேன். இந்த நிலையில் எனக்கென்று ஒரு துணை தேடுவது சரியாக இருக்காது.
இத்தனை காலங்கள் தனியாக இருந்து பல கஷ்டங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். எனவே இனி வரும் காலங்களிலும் அதே போல தனிமையில் தான் இருக்க போகிறேன் துணை தேட விரும்பவில்லை’ என்று அவர் கூறியிருந்தார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரகதி, தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு லைக்குஸ் பெற்று வருகிறார்.