'Sembaruthi Success Meetக்கு கூப்பிட்டு அசிங்கப்படுத்திட்டாங்க! 'கண்கலங்கி பேட்டியளித்த நடிகை !
விஜய் தொலைக்காட்சிக்கு போட்டியாக TRPகளில் ஜீ தமிழில் பல சீரியல்கள் இடம் பிடிப்பது வழக்கம். பிரல தொலைக்காட்சியான் ஜீ தமிழில் பல சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. அப்படி மிகப்பெரியளவில் பிரபலமான சீரியல் செம்பருத்தி. 2017ல் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் கார்த்திக் ராஜ், சபானா, பிரியா ராமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தது.
அதில் கதாநாயகியாக பார்வதி என்னும் ரோலில் நடித்து வரும் ஷபானா, தனது நடிப்பின் மூலம் சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து தந்த சாதனை இவரை சேரும். இடையில் சில கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக் ராஜ் வெளியேறி அவருக்கு பதில் வேறு நடிகர் நடித்து வந்தார்.
1432 எபிசோட்டிற்கு பின் செம்பருத்தி சீரியல் நிறைவடைந்துள்ளது. சீரியலில் நடித்த அனைவரையும் கவுரவிக்கும் வண்ணம் ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்த விஜே மெளனிகா ஆதங்கமாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். சீரியலில் சிறப்பான உழைப்பை கொடுத்திருக்கிறேன். ஆனல் சேனல் எனக்கான மதிப்பை கொடுக்கவில்லை.
முக்கிய ரோலில் நடித்தவர்களை மட்டுமே கண்டுகொண்டது. எனக்கான மொமெண்டோ எங்கே, என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று கூறி அவர் பகிர்ந்த பதிவு வைரலாக பகிரப்பட்டு வந்தது.
தற்போது, பேட்டி ஒன்றில், என்னை மேடையிலேயே வைத்து விருது கொடுக்காமல் அசிங்கப்படுத்தியதாகவும், பெயருக்கு கூட்டத்தோடு கூட்டமாக ஒரு விருதை கொடுத்ததாகவும், மேடையிலேயே வைத்து ஐந்து வருடமாக உழைத்த எனக்கு ஏன் உரிய மரியாதை செய்யவில்லை என்று அனைவரும் முன்பாகவும் கேட்டு விட்டதாகவும், ஆனால் அதை சேனல் ஒளிபரப்பாமல் செய்து விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் செம்பருத்தி சீரியலில் வேலை இல்லாத காரணத்தால், தான் வேறு சேனலுக்கு சென்றபோது நீங்கள் அவ்வாறு செல்லக்கூடாது என்று தன்னை கட்டாயப்படுத்தி அந்த சீரியலிலும் வாய்ப்பு கிடைக்காமல் செம்பருத்தி சீரியலிலும் நாட்கள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறினார். மேலும் தான் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக உடைகளை கூட தன் சொந்த செலவில் வாங்கி நாடகத்தில் நடித்ததாகவும், எனக்கு இந்த மரியாதை கூட கிடைக்கவில்லை என்றும் அவர் கண் கலங்கி பேசியுள்ளார்.