Sorry.. தோசை சுட்டு மன்னிப்பு கேட்கும் சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த்.. வைரலாகும் வீடியோ..!

serial-actor-dosa-sorry-video-goes-viral

சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.

serial-actor-dosa-sorry-video-goes-viral

அந்த வரிசையில், சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் - நடிகை சம்யுக்தா ஜோடி இணைந்து, பின்னர் திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட இருவரும் ஒன்றாக வாழவில்லை. இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்ததோடு சோஷியல் மீடியாக்களில் ஒருவரை இருவர் மாறி மாறி மோசமாக , கீழ்த்தரமான வார்த்தைகளால் குற்றம் சாட்டினர்.

serial-actor-dosa-sorry-video-goes-viral

இந்நிலையில், இப்போது இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது, விஷ்ணுகாந்த் குண்டிநிண்டா குடிகண்டலு என்ற சீரியலில் நடித்து வருகிறார். தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரியல் சிறகடிக்க ஆசை சீரியலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் விஷ்ணுகாந்த் தோசையில் சாரி சுடும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். இதை பார்த்த பலரும் இது சீரியல் காட்சியா அல்லது வேறு யாருக்காவது இப்படி தோசை சுடுகிறாரா என கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this post