படத்திற்கு A சான்றிதழ் ; ஆனாலும் அந்த காட்சிகளை நீக்க மாட்டேன்; விடாப்பிடியாய் சொன்ன ஹீரோ..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் படம் ராயன். தனுஷின் 50 வது திரைப்படம் என்பதால் அவரே இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார்.
தனுஷின் பிறந்த நாள் ஜூலை 28 அதற்கு முன்பே ஜூலை 26 ஆம் தேதி திரையில் ராயன் வெளியாகவுள்ளது. பா.பாண்டி படத்திற்கு பிறகு ராயன் படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருக்கின்றார் தனுஷ்.
இந்நிலையில் ராயன் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும், அவர்கள் குறிப்பிடும் காட்சிகளை நீக்கினால் படத்திற்கு u /a சான்றிதழ் வழங்குவதாகவும் கூறியுள்ளார்களாம்.
\ தனுஷ் எந்த காட்சியையும் நீக்கமாட்டேன் என விடாப்பிடியாக இருக்கிறாராம்.ராயன் திரைப்படம் கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி உள்ளதாம். எனவே சண்டை காட்சிகள் ராவாக இருக்கிறதாம். ரத்தம் தெறிக்க ஆக்ஷன் படமாக ராயன் உருவாகியிருப்பதால் தான் இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கியிருப்பதாக தெரிகிறது.காட்சிகளை நீக்கினால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் காட்சிகளை நீக்க மாட்டேன் என தனுஷ் சொன்னதாக சொல்லப் படுகிறது.