Viral Video: ‘எவனுக்கு ஓட்டு போட்டாலும்’.. 'செம்பி' படத்தில் இருந்து நீக்கப்பட்ட வசனம் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

sembi scene has been muted for this dialogue video getting viral on social media

மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களை தந்த பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் செம்பி. பிரபு சாலமன் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு அவர் இயக்கியுள்ளார்.

sembi scene has been muted for this dialogue video getting viral on social media

பேருந்து பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கோவை சரளா பழங்குடியின பெண்ணாக நடித்து இருந்தார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பேமஸ் ஆன கோவை சரளா, தனக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை இப்படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். அந்த கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்து அசத்தி உள்ள கோவை சரளாவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

sembi scene has been muted for this dialogue video getting viral on social media

செம்பி திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. செம்பி படத்தின் டிரைலர் வெளியானபோது அதன் இறுதியில் ஒரு வசனம் இடம்பெற்று இருக்கும், அதில் அரசியல்வாதி ஒருவர் தனக்கு ஓட்டு போட்டால் உனது பேத்தியை டாக்டர் ஆக்கி விடுவேன் என கூறுவார்.

sembi scene has been muted for this dialogue video getting viral on social media

இதையடுத்து கோவை சரளாவிடம் அவரது பேத்தி, பாட்டி நீ அந்த மாமாவுக்கே ஓட்டு போட்ரு அவர் என்னைய டாக்டர் ஆக்கிடுவாறு என கூறவே, இதற்கு பதிலளிக்கும் கோவை சரளா, எவனுக்கு ஓட்டு போட்டாலும் டாக்டர் ஆக முடியாது நீ நல்லா படிச்சா தான் டாக்டர் ஆக முடியும் என கூறுவார்.

sembi scene has been muted for this dialogue video getting viral on social media

டிரைலரில் இந்த வசனம் இடம்பெற்றபோதே இது படத்தில் வருமா என்கிற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், இந்த வசனத்தை படத்தில் மியூட் செய்துவிட்டனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளதன் காரணமாக தான் இந்த வசனத்தை மியூட் செய்துவிட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Share this post