செல்வராகவன் விவாகரத்து செய்யப்போகிறாரா? திடீர் ட்வீடால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
இயக்குனர்கள் பலர் எடுத்துக்காட்டாக கவுதம் மேனன், ரவிக்குமார், சமுத்திரக்கனி, சசிகுமார் என பலரும் நடிகர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், செல்வராகவன் தற்போது தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதனைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, NGK, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.
பீஸ்ட், சாணி காயிதம், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஒரு படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
இவ்வாறு இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்து வரும் செல்வராகவன் ட்விட்டரில் அவ்வப்போது தத்துவ பதிவுகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்த பதிவு மிகவும் வைரல் ஆகி உள்ளது.
அதில், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” என பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், அவருக்கு மீண்டும் விவாகரத்து ஆகிவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே முதலாவதாக நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற செல்வராகவன், அடுத்ததாக கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் போட்டுள்ள இந்த தத்துவ பதிவு, ஒருவேளை அவர் இரண்டாவது மனைவியையும் விவாகாரத்து செய்துவிட்டாரோ என்கிற வதந்தியை எழ செய்துள்ளது.