Viral Video: ‘அந்த சீன் எதுக்கு.. எவன் பாத்து என்ன கிழிக்க போறோம்’ – ரஜினி நடித்த சிவாஜி பட காட்சியை கலாய்த்த செல்வராகவன்..
இயக்குனர்கள் பலர் எடுத்துக்காட்டாக கவுதம் மேனன், ரவிக்குமார், சமுத்திரக்கனி, சசிகுமார் என பலரும் நடிகர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், செல்வராகவன் தற்போது தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதனைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, NGK, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.
பீஸ்ட், சாணி காயிதம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது தனுஷ் உடன் நானே வருவேன் படத்தில் நடித்தும் இயக்கியும் நடித்துள்ளார். ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஒரு படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இதன் 2ம் பாகம் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் & புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகங்களை இயக்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே செல்வராகவன் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு பின் அப்படங்கள் குறித்த எந்தவித அப்டேட்டையும் அவர் வெளியிடவில்லை.
இந்நிலையில், சிவாஜி படத்தில் ரஜினி நடித்த ஒரு காட்சி குறித்து கிண்டல் செய்து செல்வராகவன் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதாவது, செல்வராகவன் அவர்கள் பேட்டி ஒன்றில், சாலை ஓரத்தில் ஒரு வேலை சாப்பாடுக்கு எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், ஒரு பாடலின் போது துப்பாக்கியில் குண்டு வெளிவரும் அந்த ஒரு காட்சிக்கு 100 கணக்கான கேமராக்கள். ஒரு கோடி ரூபாய் செலவில் அந்த ஒரு காட்சி எடுக்கிறார்கள். இதனால் என்ன பலன்? இது ஏற்கனவே ஹாலிவுட் படத்தில் காண்பித்து விட்டார்கள்.
இது செஞ்சி என்ன சாதித்தார்கள்? என்று தெரியவில்லை. இதே அந்த பணத்தில் ஒரு மனிதனுடைய எதிர்காலமே நன்றாக அமைந்திருக்கும். இது ஆரம்பத்தில் எனக்கு விசித்திரமாக இருந்தது. பின் அதிசயமாக இருந்தது. பின் சீ போங்கடா! என்று ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சித்து நீ எதுக்குடா பல கோடி ரூபாயில் படம் எடுக்கிறாய்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Selva is us! Like literally us! pic.twitter.com/FkoooAMejL
— The Devil' 😈🥳 Hyped up for பொன்னியின் செல்வன் 👑 (@iampaamaran) September 27, 2022