அடுத்தது ஆயிரத்தில் ஒருவன் 2'ஆ..புதுப்பேட்டை 2'ஆ ? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட செல்வராகவன்

Selvaraghavan announces update about aayirathil oruvan 2 and pudhupettai 2

இயக்குனர்கள் பலர் எடுத்துக்காட்டாக கவுதம் மேனன், ரவிக்குமார், சமுத்திரக்கனி, சசிகுமார் என பலரும் நடிகர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், செல்வராகவன் தற்போது தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.

Selvaraghavan announces update about aayirathil oruvan 2 and pudhupettai 2

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதனைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, NGK, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.

Selvaraghavan announces update about aayirathil oruvan 2 and pudhupettai 2

பீஸ்ட், சாணி காயிதம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது தனுஷ் உடன் நானே வருவேன் படத்தில் நடித்தும் இயக்கியும் வருகிறார். ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஒரு படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

Selvaraghavan announces update about aayirathil oruvan 2 and pudhupettai 2

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இதன் 2ம் பாகம் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் & புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகங்களை இயக்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே செல்வராகவன் அறிவித்திருந்தார்.

Selvaraghavan announces update about aayirathil oruvan 2 and pudhupettai 2

அந்த அறிவிப்புக்கு பின் அப்படங்கள் குறித்த எந்தவித அப்டேட்டையும் அவர் வெளியிடவில்லை. இதனால் அந்த படம் எடுக்கப்படுமா என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் அந்த இரண்டு படங்கள் குறித்தும் செல்வராகவன் பேசியுள்ளார். அதன்படி, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் எனவும், முதலில் புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தை எடுக்க உள்ளதாக கூறி உள்ளார். இதனால் ரசிகர்கள் குஷியில் ஆர்வத்துடன் இதன் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Selvaraghavan announces update about aayirathil oruvan 2 and pudhupettai 2

Share this post