'அது கல்யாணமா இல்ல வியாபாரமா..' நயன்தாரா திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பான சீமான்.. வைரலாகும் வீடியோ !

Seeman angry reply for question about nayanthara marriage video viral

கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.

Seeman angry reply for question about nayanthara marriage video viral

இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

Seeman angry reply for question about nayanthara marriage video viral

கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார்.

Seeman angry reply for question about nayanthara marriage video viral

இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது.

Seeman angry reply for question about nayanthara marriage video viral

இந்நிலையில், இவர்கள் திருமணம் குறித்து சீமான் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ செம வைரல் ஆகி வருகிறது. பாஞ்சாலங்குறிச்சி, வீர நடை போன்ற திரைப்படங்களை இயக்கத் தொடங்கிய சீமான், மாதவன் நடிப்பில் வெளியான தம்பி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர்.

Seeman angry reply for question about nayanthara marriage video viral

பின்னர், அரசியல் மீது ஆர்வம் காட்டத் தொடங்கிய சீமான், சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது நாம் கட்சி தலைவராக அரசியல் மற்றும் நாட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து பேசியும் வருகிறார்.

Seeman angry reply for question about nayanthara marriage video viral

சமீபத்தில் பேட்டி ஒன்றில், சீமான் பேசுகையில், பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கிறார்கள், பல இடங்களில் கிலோ கணக்கில் கஞ்சா கைப்பற்றுகின்றனர். இதெல்லாம் திராவிட மாடலில் வருகிறது.

தொலைக்காட்சி விவாதங்களில் என்ன நடக்கிறது? நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது திருமணமா என்பது போன்ற விவாதம் நடக்கிறது. என்னிடமே ஒரு நிருபர், அந்த திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார், அதற்கு வேறு எதாவது கேளப்பா என சொன்னேன் என கூறினார். இந்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post