பிரபல சீரியல் தொடரில் நடிகர் சத்யராஜ்.. எதிர்பார்ப்பை தூண்டும் எபிசோட் !

Sathyaraj to act in pudhu pudhu arthangal serial for veetla vishesham trailer

சட்டம் என் கையில் என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, சாவி என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர், கொங்கு தமிழில் பேசும் நக்கல் பேச்சிற்கு பெயர் பெற்றவர்.

Sathyaraj to act in pudhu pudhu arthangal serial for veetla vishesham trailer

திரைப்படங்களில் இவர் பல முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தான் நடிக்கும் படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்படும் அளவிற்கு திறமையாக நடிப்பவர். மந்திர புன்னகை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் என் பக்கம், சின்னப்பதாஸ் போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்தில் நடித்துள்ளார்.

Sathyaraj to act in pudhu pudhu arthangal serial for veetla vishesham trailer

ஒன்பது ரூபாய் நோட்டு, 6’2, பாகுபலி, அமைதிப்படை போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் தற்போது வரை பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ஹீரோ, காமெடி நடிகர், வில்லன், குணச்சித்திர வேடம் அனைத்தையும் ஏற்று நடிக்க கூடியவர்.

Sathyaraj to act in pudhu pudhu arthangal serial for veetla vishesham trailer

இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகவுள்ள வீட்ல விசேஷம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.

Sathyaraj to act in pudhu pudhu arthangal serial for veetla vishesham trailer

இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது. இவர் தற்போது சீரியல் தொடர் ஒன்றில் நடித்துள்ள தகவல் பெரும் வைரலாகி வருகிறது.

Sathyaraj to act in pudhu pudhu arthangal serial for veetla vishesham trailer

90ஸ் களில் டாப் நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானி, சூர்யா வம்சம், காதல் கோட்டை, பாரதி போன்ற தமிழ் திரைப்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர். கிட்டத்தட்ட 50 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரையில் கோலங்கள் தொடரின் மூலம் பிரபலம் அடைந்தார்.

Sathyaraj to act in pudhu pudhu arthangal serial for veetla vishesham trailer

தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது புது அர்த்தங்கள் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எப்எம் சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார் தேவயானி. இதில் வீட்ல விஷேஷம் திரைப்பட குழுவினர் ப்ரோமோஷன்காக பங்கேற்றுள்ளனர்.

Sathyaraj to act in pudhu pudhu arthangal serial for veetla vishesham trailer

இதன் மூலம் நடிகர் சத்யராஜும் சீரியலில் நடித்துவிட்டார். இவரை சின்னத்திரையில் சீரியலில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விரைவில் இந்த எபிசோட் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sathyaraj to act in pudhu pudhu arthangal serial for veetla vishesham trailer

Share this post