அனைவரையும் கண்கலங்க வைத்த அமுதவானன்.. நெகிழவைத்த சத்யராஜ் ! வைரல் ப்ரோமோ

Sathyaraj in kpy champions show for veetla vishesham promotion

சட்டம் என் கையில் என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, சாவி என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர், கொங்கு தமிழில் பேசும் நக்கல் பேச்சிற்கு பெயர் பெற்றவர்.

Sathyaraj in kpy champions show for veetla vishesham promotion

திரைப்படங்களில் இவர் பல முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தான் நடிக்கும் படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்படும் அளவிற்கு திறமையாக நடிப்பவர். மந்திர புன்னகை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் என் பக்கம், சின்னப்பதாஸ் போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்தில் நடித்துள்ளார்.

Sathyaraj in kpy champions show for veetla vishesham promotion

ஒன்பது ரூபாய் நோட்டு, 6’2, பாகுபலி, அமைதிப்படை போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் தற்போது வரை பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ஹீரோ, காமெடி நடிகர், வில்லன், குணச்சித்திர வேடம் அனைத்தையும் ஏற்று நடிக்க கூடியவர்.

Sathyaraj in kpy champions show for veetla vishesham promotion

இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகவுள்ள வீட்ல விசேஷம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.

Sathyaraj in kpy champions show for veetla vishesham promotion

இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது.

Sathyaraj in kpy champions show for veetla vishesham promotion

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ப்ரோமோஷனுக்காக தற்போது விஜய் டிவியின் KPY சாம்பியன்ஸ் டபுள்ஸ் நிகழ்ச்சியில் சத்யராஜ் கலந்துகொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில் விஜய் டிவி காமெடியன் அமுதவானன் சத்யராஜ் போல வேடமணிந்து மிமிக்ரி செய்துள்ளார். அதன் பின் காமெடி செய்பவர்களை எங்கேயும் மதிப்பதில்லை, மரியாதை கொடுங்கள் என கூறி கண் கலங்கி பேசுகிறார். அப்போது பேசும் சத்யராஜ் தனக்கு அமுதவாணன் போல மிமிக்ரி செய்யும் ரோலில் நடிக்க ஆசை என கூறுகிறார்.

Share this post