டயலாக் கூட மாத்தல.. தெறி பட சீனை அப்பட்டமாக காபி அடித்த சத்யா சீரியல்.. ட்ரோல் ஆகும் வீடியோ !

Sathya serial scenes got copied from theri movie

தற்போது ஜீ தமிழ், விஜய் டிவி, கலர்ஸ் இவை மூன்றிலும் இல்லத்தரசிகளின் பேவரைட் ஷோக்கள் அனைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது. கொரானா தொடங்கிய காலத்திலிருந்து ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்றுவிட்டனர்.

Sathya serial scenes got copied from theri movie

இதனால் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் தொடர்களை இந்த சேனல்கள் ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

Sathya serial scenes got copied from theri movie

அதிலும் சத்யா தொடர் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. ஜீ தமிழில் 2019ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் சத்யா. ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிந்துரா பிந்து’ என்ற ஒடியா மொழித் தொடரின் ரீமேக் தான் சத்யா. இந்த தொடரில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

Sathya serial scenes got copied from theri movie

ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாக வைத்து கொண்ட இந்த தொடர், ஒளிபரப்புச் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், இடையில் திடீரென்று இந்த தொடர் நிறுத்தப்படுவதாக ஜீ தமிழ் சேனல் அறிவித்து இருந்தது. இந்த அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி போயினர்.

Sathya serial scenes got copied from theri movie

பின் மக்களின் விருப்பத்தின் பெயரில் இந்த சீரியலின் 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 2ம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது.

Sathya serial scenes got copied from theri movie

இந்நிலையில் சத்யா 2 சீரியல் குறித்த மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஏனெனில், சத்யா சீரியலில் வரும் ஒரு காட்சி அப்படியே இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் வரும் காட்சியை காப்பி அடித்து உள்ளனர்.

Sathya serial scenes got copied from theri movie

அதாவது, படத்தில் விஜய் திருடன்களை பள்ளிக்கூடத்தில் வைத்து அடிப்பார். அதே போல, சத்யா 2 சீரியலில் சத்யா ரவுடிகளை ரைம்ஸ் சொல்லி அடிக்கிறார். இந்த காட்சி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sathya serial scenes got copied from theri movie

இதை பார்த்த பலரும் மீம்ஸ்களை தெரிக்கவிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் ஏன்டா, அட்லி பண்ணா மட்டும் காப்பி காப்பி என்று சொல்லிக்கொண்டே முன்னாடி வருகிற அந்தக் கூட்டம் இப்ப எங்கடா போனீங்க? என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

Sathya serial scenes got copied from theri movie

Share this post