திரிஷா, அரவிந்த் சாமி நடிப்பில் சதுரங்க வேட்டை 2.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Sathurangavettai 2 release date announced

2014ம் ஆண்டு ஹெச். வினோத் இயக்கத்தில் ரிலீசான படம் சதுரங்க வேட்டை. நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்திருந்த இப்படம் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அதன் திரைக்கதை தான். பணத்தாசை காட்டி சாமானிய மக்களை நூதன முறையில் ஏமாற்றும் கும்பலை பற்றி இப்படத்தில் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தனர்.

Sathurangavettai 2 release date announced

இப்படம் இயக்குனர் ஹெச்.வினோத்தின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, ஏகே 61 என குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்துவிட்டார். இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு சதுரங்க வேட்டை படத்தின் 2ம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Sathurangavettai 2 release date announced

பிற படங்களில் பிசியான காரணத்தால் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க முடியாத சூழல் உருவானது. இதனால் சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இப்படத்தை இயக்க முன்வந்தார். ஆனால் கதை மட்டும் ஹெச். வினோத் எழுதி இருந்தார். மேலும் அரவிந்த் சாமி நாயகனாகவும், திரிஷா நாயகியாகவும் நடித்து இருக்கிறார்.

Sathurangavettai 2 release date announced

பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீசாகாமல் இருந்தது. இந்நிலையில், பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு தற்போது இப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 7ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

Sathurangavettai 2 release date announced

Share this post