SKவின் 'டான்' பட பாடலை வீடியோ போட்டு கலாய்த்த நடிகர் !

Sathish makes fun on private party song video resembling naai sekar song

டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். மேலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சூரி, சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா, பால சரவணன், ஷிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Sathish makes fun on private party song video resembling naai sekar song

இப்படம் வருகிற மே 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இப்படத்தின் 3ம் சிங்கிள் பிரைவேட் பார்ட்டி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Sathish makes fun on private party song video resembling naai sekar song

பிரைவேட் பார்ட்டி பாடலை, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருக்க, சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்பாடல் எதிர்பார்த்த அளவு இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Sathish makes fun on private party song video resembling naai sekar song

இந்நிலையில், பிரைவேட் பார்ட்டி பாடலில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆடியுள்ள நடனம், நாய் சேகர் படத்துக்காக தான் ஆடியது போல் உள்ளது என நகைச்சுவை நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Sathish makes fun on private party song video resembling naai sekar song

இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள சதீஷ், நாய்சேகர் படத்தை புரமோட் செய்ததற்காக டான் படக்குழுவுக்கு நன்றி என பதிவிட்டு உள்ளார்.

Share this post