மேடையில் நடிகையிடம் ஜாக்கெட் பற்றி ஜோக் நடித்துள்ள சதிஷ்.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்து வருபவர் நடிகர் சதீஷ். எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, பைரவா, வேலைக்காரன் போன்ற பல முக்கிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்தவர். சமீபத்தில், இவர் மேடை பேச்சு ஒன்று இவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
எதுவாக் இருந்தாலும் அதனை மேடையில் வெளிப்படையாக, வேடிக்கையாக பேசி சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். சன்னி லியோன் லீட் ரோலில் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய ரோலில் சதிஷ் நடித்துள்ளார். அப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சன்னி லியோன் சேலையிலும் தர்ஷா குப்தா மாடர்ன் ஆடையிலும் வந்திருந்தனர். இதுகுறித்து சதீஷ் மேடையில் பேசியபோது, பாலிவுட்டில் இருந்து வந்த சன்னி லியோனியே சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா எப்படி வந்திருக்கார்ன்னு பாருங்க என்று கிண்டலாக விமர்சித்திருந்தார்.
இதற்கு சின்மயி, இயக்குன் நவீன் உள்ளிட்ட பலர் கண்டங்களை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து சதீஷ் மன்னிப்பு கேட்டும் அந்த விஷயத்தை தர்ஷா தான் கூறச்சொன்னார் என்று வீடியோவை பகிர்ந்தார். ஆனால் அப்படி நானே சொல்லச்சொல்வேனா என்றும் தர்ஷா சதீஷை கண்டித்தார்.
இந்நிலையில் சதீஷ் ஏற்கனவே விருது மேடையில் நடிகை தான்யாவிடமும் இப்படி ஜாலியாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இவன் இதே வேலையா தான் இருப்பான் போலருக்கு...😩#sathishhttps://t.co/vUPcWNMrRD
— இந்திரன் (@Am_Indran) November 11, 2022