Viral Video: ஆடை விவகார சர்ச்சை.. பேட்டியில் அந்தர் பல்டி அடித்த சதிஷ் & தர்ஷா குப்தா.
இயக்குனர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், தர்ஷா குப்தா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தில் நடிகை சன்னி லியோன் ஹீரோயினியாக நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. யோகி பாபு, சதிஷ், ரமேஷ் திலக், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பிரம்மாண்டமாக நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த ஒரு சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சன்னி லியோன் யாரும் எதிர்பாராத விதமாக பச்சை நிற பட்டுப்புடவையில் அழகு தேவதை போல் வந்திருந்தார். நடிகை தர்ஷா குப்தா கவர்ச்சிக்கு குறைவில்லாத உடையில் வந்திருந்தார்.
நடிகர் சதீஷ் மேடையில் பேசும்போது, பாம்பேவில் இருந்து வந்திருக்கும் சன்னி லியோன் பட்டு புடவை கட்டி வந்திருக்காங்க.. ஆனால் கோயம்புத்தூரில் இருந்து வந்த பொண்ணு எப்படி வந்திருக்காங்க பாருங்க? என இருவருடைய ஆடையும் ஒப்பிட்டு பேசிய விஷயம் பல்வேறு சர்ச்சையை கிளப்பியது.
நடிகர் சதீஷின் பேச்சுக்கு எதிராக பலர் பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில், இதற்கு விளக்கம் கொடுத்த சதீஷ், தர்ஷா குப்தா என்னிடம் சன்னி லியோன் கவர்ச்சி உடையில் வருவார் என எண்ணி, நான் கவர்ச்சி உடையில் வந்தேன். ஆனால் அவர் பட்டுப்புடவை அணிந்து வந்ததால் அப்செட் ஆகி விட்டேன் என வருத்தத்துடன் கூறியதாகவும், பின்னர் இதனை அவர் மேடையில் தன்னை கூற சொன்னதாகவும் கூறினார். தர்ஷா குப்தா அதற்கு எதிராக ட்வீட் ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சதிஷ் மற்றும் தர்ஷா குப்தா ‘ஆடை விவகாரத்திற்கு பிறகுதான் நாங்கள் இன்னும் நெருங்கிய நண்பர்களானோம். அதன் பிறகுதான் நிறையவே பேசினாேம். அவங்களோட அதன் நிறைய எனக்கு புரிய ஆரம்பித்தது. தர்ஷாவின் அம்மாவிடமும் நான் பேசினேன். எனது மனைவியடமும் அவர் உரையாடினார். இந்த விஷயத்தை நாங்கள் இருவரும் பாசிட்டிவாகத்தான் பார்க்கிறோம். ‘ என்று கூறி இருக்கிறார். மேலும், தர்ஷா குப்தா பேசுகையில் ‘அந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் இன்னுமே நிறைய பேசினோம். எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது.’ என்று கூறியுள்ளார்.
I mean - To actually *point* at a woman and ask for mass heckling of a crowd by a man on a woman who doesn’t dress according to culture.
— Chinmayi Sripaada (@Chinmayi) November 9, 2022
When will this behaviour from men stop?
Its not funny. pic.twitter.com/HIoC0LM8cM