'சர்தார் - 2ம் பாகம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி !

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இந்த வருடம் மிகவும் ராசியான வருடம் என்று தான் கூற வேண்டும். இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ ஆகிய படங்கள் பிரமாண்ட வெற்றி பெற்றது மட்டும் இன்றி, திரையரங்கில் நின்று வசூல் வேட்டை செய்தது.
தீபாவளி கொண்டாட்டமாக வெளியான ‘சர்தார்’ படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் உளவாளி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். இரும்பு திரை, ஹீரோ படத்தின் இயக்குனரான மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார் கார்த்தி. அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பையடுத்து ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர். ‘சர்தார்’ பட வெற்றி விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன், டைரக்டர் பி.எஸ்.மித்ரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர், எடிட்டர், கலை இயக்குநர் , ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் என பலரும் கலந்து கொண்டனர்.