யாரு National Award வாங்குனா எனக்கென்ன..?' சூர்யா பற்றிய கேள்விக்கு கடுப்பான சந்தானம்.. காரணம் இதுதானா..?

Santhanam speaks angrily about question about actor suriya national award

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் கலை துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சந்தானம். இதனைத் தொடர்ந்து, இவருக்கு மன்மதன் படத்தில் சிம்பு உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், சச்சின் மற்றும் பொல்லாதவன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்துள்ளார்.

Santhanam speaks angrily about question about actor suriya national award

அறை எண் 305ல் கடவுள், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, A1, டகால்ட்டி, பிஸ்க்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Santhanam speaks angrily about question about actor suriya national award

தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள குலுகுலு திரைப்படம் வெளியாகவுள்ளது. இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சந்தானம், சந்தோஷ் நாராயணன், உதயநிதிஸ்டாலின், ரத்னகுமார் என பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Santhanam speaks angrily about question about actor suriya national award

அப்போது செய்தியாளர் ஒருவர் சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யா தேசிய விருது வாங்கியுள்ளார். இதற்கு உங்கள் கருத்து என்ன..? என கேட்க, இதனால் சந்தானம் கடுப்பாகி, ”யார் தேசிய விருது வாங்குனா எனக்கென்ன.? இதைப் பற்றி சொல்ல எல்லாம் எனக்கு நேரம் கிடையாது. இது குளு குளு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு. இந்த படத்தை பற்றி மட்டும் பேசுங்கள். இந்த படம் குறித்து ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தா கேளுங்கள்” என கூறிவிட்டாராம்.

Santhanam speaks angrily about question about actor suriya national award

சந்தானம் இப்படி பேசியுள்ளதால், சூர்யா ரசிகர்கள் சற்று கோபத்தில் இருக்கிறார்களாம். மேலும் ஏற்கனவே சூர்யா நடிப்பில் ott-யில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் வெளியான போது அந்த படம் குறித்து சந்தானம் பேசியது சர்ச்சை ஆனது. அதை மனதில் வைத்து தான் சந்தானம் இப்படி பேசியுள்ளாரா..? எனவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் சந்தானம் மற்றும் சூர்யா இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

Santhanam speaks angrily about question about actor suriya national award

சூர்யா, சந்தானம் காம்போவில் சில்லுனு ஒரு காதல், சிங்கம் போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Santhanam speaks angrily about question about actor suriya national award

Share this post