புலி வாலை பிடித்தபடி வீடியோ.. சர்ச்சையில் சிக்கிய சந்தானம்... முட்டாள்தனம், கொடூரம்னு திட்டும் நெட்டிசன்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் கலை துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சந்தானம். இதனைத் தொடர்ந்து, இவருக்கு மன்மதன் படத்தில் சிம்பு உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், சச்சின் மற்றும் பொல்லாதவன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்துள்ளார். அறை எண் 305ல் கடவுள், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
பின்னர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, A1, டகால்ட்டி, பிஸ்க்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலுகுலு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த ஆண்டு கூட இவர் நடிப்பில் வெளிவந்த குளுகுளு, ஏஜண்ட் கண்ணாயிரம் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. தற்போது கிறிஸ்துமஸ் மற்றூம் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் விதமாக சுற்றுலா சென்றுள்ள நடிகர் சந்தானம், உயிரியல் பூங்கா ஒன்றில் புலியின் அருகே அமர்ந்தபடி அதன் வாலை பிடித்தபடி எடுத்த வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “இதற்கு பெயர் தான் புலிவாலை பிடிக்கிறதா” என நகைச்சுவையாக பதிவிட்டு இருந்தார்.
அவர் காமெடியாக பதிவிட்ட இந்த விஷயம் தான் தற்போது அவருக்கு தலைவலியாக மாறி உள்ளது. அந்த வீடியோவில் புலியை ஒருவர் குச்சியால் குத்தும்படியான காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. விலங்குகளை வதைக்கும்படியான வீடியோவை பதிவிட்டுள்ள சந்தானத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.
What an exhibition of stupidity ,idiotism and irresponsible behaviour.
— Shankar Singh (@shankarVrikshit) December 27, 2022